மின்னணு சேவை, மொபைல் வங்கி சேவை என வங்கித்துறை தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டு வந்தாலும் ஏடிஎம் இயந்திரங்களின் தேவை குறையாது என்று என்சிஆர் கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்ரோஸ் தஸ்துர் தெரிவித்தார்.
சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் செய்தி யாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவு. இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்கு 120 ஏடிஎம் இயந்தி ரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சீனாவில் 10 லட்சம் நபர்களுக்கு 350 ஏடிஎம்களும் அமெரிக்காவில் 1,500 ஏடிஎம்களும் உள்ளன.
மின்னணு பண பரிவர்த்தனை அதிகம் இருக்கும் நாட்டில் இவ்வளவு ஏடிஎம்கள் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் குறைவு. இப்போது ஜன்தன் யோஜனாவின் கீழ் வங்கி கணக்கு தொடங் கப்படுகிறது, பலவிதமான மானியங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. ஆனால் கடைசி மனிதன் வரை ஏடிஎம்கள் செல்லவில்லை.
சாதாரணமாக ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு செல்லும் பட்சத்தில் அவருக்கு சேவை செய்வதற்கு 65 ரூபாய் செலவா கிறது. ஆனால் ஏடிஎம் செல்லும் பட்சத்தில் ஒரு வாடிக்கையாள ருக்கு ரூ.20 மட்டுமே செல வாகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணபரிமாற்றம் உயர்ந்து வரு கிறது என்பது உண்மைதான். ஆனால் முற்றிலும் டிஜிட்டல் என்னும் சூழ்நிலை இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. 95% பரிமாற் றங்கள் ரொக்கமாகவே நடைபெறு கின்றன என்று கூறினார்.