வணிகம்

இவரைத் தெரியுமா?- அஞ்சுலே சிப் துகால்

செய்திப்பிரிவு

மத்திய நிதிச் சேவைத் துறை யின் செயலர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1981-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலிருந்து தேர்வானவர்.

வங்கி, நிதி நிறுவனங்கள். காப் பீடு, ஓய்வூதிய சீரமைப்பு உள்ளிட்ட விஷயங்களை கையாளுவதுடன், நிதியமைச்சரின் நேரடி அதிகாரத் தின் கீழ் உள்ளார்.

இதற்கு முன்பு மத்திய நிறுவனங் கள் விவகாரத்துறை செயலராக பணியாற்றியுள்ளார். n

நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுகள் துறையில் சிறப்பு கூடுதல் செயலர், இணைச் செயலர் உள்ளிட்ட பணிகளில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். பஞ்சாப் நிதிக் கமிஷன் உறுப்பினர் செயலராகவும் இருந்துள்ளார்.

தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாடு துறையில் இணைச் செயலர், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT