வணிகம்

டாடா சன்ஸ், டொகோமோ நிறுவனங்களின் ஒப்பந்தத்துக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

செய்திப்பிரிவு

டாடா சன்ஸ் நிறுவனத்துக்கும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனத்துக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் சுமூக தீர்வு ஏற்படும் சூழலில் அந்த ஒப்பந்தத்துக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

2009-ம் ஆண்டு டாடா டெலிசர்வீ சஸ் நிறுவனத்தில் 26.5 சதவீத பங்குகளை என்டிடி டொகோமோ ரூ.12,740 கோடிக்கு வாங்கியது. ஆனால் இணைப்பின் போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டொகோமோ வெளியேற நினைத் தால் குறைந்தபட்சம் 50 சதவீத தொகை திரும்ப கிடைக்க வேண் டும் என ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தம் நடந்தது 2009-ம் ஆண்டு. ஆனால் 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி விதிமுறை களில் சில மாற்றங்கள் செய்யப்பட் டன. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் சந்தை மதிப்பு அடிப் படையிலேயே தொகையை பெற முடியும். முன் தேதியிட்ட விலை யின் படி முதலீட்டை திரும்ப பெற முடியாது என விதியை மாற்றியது.

இந்த நிலையில் ஒப்புக்கொண்ட படி டாடா சன்ஸ் 118 கோடி டாலர் தொகையை தர முன்வந்திருக் கிறது. ஆனால் டெல்லி உயர்நீதி மன்றத்தில் இந்த ஒப்பந்தத்துக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித் திருக்கிறது. மார்ச் 8-ம் தேதி ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கினை 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி எஸ்.முரளிதர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் அபத்தமான வாதம் இது. இந்தியாவுக்கு வெளியே நடப்பதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த முடியாது, அதற்கான அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இருக் கிறதா? இரு நிறுவனங்களுக்கும் சர்வதேச அளவில் சொத்துகள் இருக்கின்றன.

அங்கெல்லாம் ரிசர்வ் வங்கி தலையிடமுடியுமா, இரு நிறுவனங் களும் ஒப்புக்கொண்ட பிறகு ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT