வணிகம்

தொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகள் குறைந்து 63.07 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது. பல வாரங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பு 63 என்ற நிலையை அடைந்தது.

இந்நிலையில், இன்றும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்று காலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 63.45 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.

இறக்குமதியாளர்கள் மத்தியில், டாலர் தேவை அதிகரித்துள்ளதே ரூபாய் மதிப்பு குறைய காரணம் என கூறப்படுகிறது.

பங்குச்சந்தை நிலவரம்:

இன்று, இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 93.26 புள்ளிகள் உயர்ந்து 20,584.22-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.30 புள்ளிகள் உயர்ந்து 6,105.10-ஆகவும் இருந்தன.

செப்டம்பர் மாதத்துக்கான நிறுவனங்களின் உற்பத்தி நிலவரம் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர்களின் விலை நிலவரம் போன்றவை இன்று வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை காலை முதலே வாங்க தொடங்கியதன் காரணமாக பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருப்பதாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT