கடந்த வாரம் பங்குச்சந்தையில் வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வாரத்தின முதல் வர்த்தக தினமான இன்று, சென்செக்ஸ் 106.42 புள்ளிகள் சரிந்து 21132.94 என்ற புள்ளிகளிலும், நிஃப்டி 28.55 புள்ளிகள் சரிந்து 6288.80 புள்ளிகள் என்ற நிலையிலும் இருந்தது. வங்கி, தொழில்நுட்பத்துறை பங்குகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
ரூபாய் மதிப்பும் சரிவு:
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. இன்று காலை, இந்திய ரூபாயின் மதிப்பு, 12 காசுகள் குறைந்து 61.86 என்ற நிலையில் வர்த்தகமாகி இருந்தது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில், டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.