வணிகம்

பங்குச் சந்தையில் உயர்வு

செய்திப்பிரிவு

பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுக மாகவே இருந்து வருகிறது. வியாழக்கிழமை வர்த்தகம் முடிவில் 13 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் குறியீட்டெண் அதிகபட்சமாக 22715 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில்ஒரு கட்டத்தில் 6819 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் வர்த்தகம் முடிவில் முந்தைய நிலையான 6796 புள்ளிகளில் நிலைபெற்றது.

மின்சாரம், கேபிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட், எண்ணெய் சுத்திகரிப்பு, ஆட்டோமொபைல் துறைகளின் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. அதேசமயம் மருந்துப் பொருள், தகவல் தொழில்நுட்பம், எப்எம்சிஜி ஆகிய துறைகளின் பங்குகளை விற்க போக்கு அதிகம் காணப்பட்டது. இதனால் இவற்றின் பங்கு விலையில் சரிவு காணப்பட்டது.

அந்நிய முதலீட்டு நிறுவன ங்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளன. புதன்கிழமை ரூ. 1,043 கோடி மதிப்பிலானபங்குகளை வாங்கி யுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் டாடா பவர் பங்கு விலை அதிகபட்சமாக 4.12 சதவீதமும், என்டிபிசி 2.57 சதவீதமும், பிஹெச்இஎல் 2.70 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.33 சத, எஸ்பிஐ 2.15 சதவீதமும் உயர்ந்தன. ஹிந்துஸ்தான் யூனி லீவர், கோல் இந்தியா, மாருதி சுஸுகி, கெயில் இந்தியா, விப்ரோல லார்சன் அண்ட் டியூப்ரோ, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை அதிகபட்சமாக 2.72 சதவீதம் சரிந்தது. சன் பார்மா 1.85%, ஹீரோ மோட்டோகார்ப் 1.70%, இன்ஃபோசிஸ் 1.43%, ஐடிசி 1.42%, ஐசிஐசிஐ வங்கி பங்கு 1.06% அளவுக்கு சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் மின்துறை 2.52%, நுகர்வோர் பொருள் 1.61%, ரியல் எஸ்டேட் 1.25%, எண்ணெய் மற்றும் எரிவாயு 0.74% ஏற்றம் பெற்றன. மருந்து 1.47%, தகவல் தொழில்நுட்பம் 0.80%, டெக் 0.73% அளவுக்குச் சரிந்தன.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,551 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,251 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,602 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஆசிய பிராந்தியத்தில் பெரும்பாலான சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த 9 வாரங்களில் முதல் முறையாக சீனாவின் மத்திய வங்கி பெருமளவிலான நிதியை வங்கித்துறைக்கு விடுவித்தது. இது பங்குச் சந்தை எழுச்சிக்கு வழிவகுத்தது.

SCROLL FOR NEXT