கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கிக்கு (கேவிபி) சிறந்த சிறிய வங்கிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவான தொகையை நிர்வகிக்கும் சிறிய வங்கிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. கேபிஎம்ஜி, பிசினஸ் டுடே, ஐசிஐசியை வங்கி இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.
மஹாராஷ்டிர மாநில நிதி மற்றும் திட்டத்துறை அமைச்சர் சுதிர் முகுந்திவாரிடமிருந்து இவ்விருதை வங்கியின் நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி கே. வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார்.