வணிகம்

அன்னிய முதலீட்டாளர்களுக்கு புதிய விதிமுறைகள்!

செய்திப்பிரிவு

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை விரைவில் அறிவிக்க இருக்கிறது இந்திய பங்கு பரிவர்த்தனை வாரிடம் (செபி).

இதற்காக அமைச்சரவை செயலர் கே.எம்.சந்திரசேகர் தலைமையிலான ஒரு கமிட்டியை செபி அமைத்தது. இந்தக் குழு பரிந்துரைத்த அறிக்கைக்கு கடந்த ஜூன் மாதத்தில் செபி ஒப்புதல் அளித்தது. மேலும், இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்தது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் படி, ”வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்(எஃப்.பி.ஐ.)” என்ற புதிய முதலீட்டு வகுப்பினை உருவாக்கி இருக்கிறது. இவர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தன்மையின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படுவார்கள். அதற்கேற்ப அவர்களிடமிருந்து தகவல்கள்(கே.ஒய்.சி.) பெறப்படும்.

இந்த புதிய விதிப்படி அன்னிய நிறுவன முதலீட்டாளர்,(எஃப்.ஐ.ஐ.), தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர் (கியூ.எஃப்.ஐ.) போன்ற பிரிவுகள் நீக்கப்பட்டு வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர் என்ற பிரிவு மட்டும் இருக்கும்.

இந்த புதிய விதிமுறைப்படி ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரோ அல்லது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமோ ஒரு இந்திய நிறுவனத்தில் அதிகபட்சம் 10 சதவிகிதம் வரை முதலீடு செய்ய முடியும். இதற்குமேல் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.) வழியாகதான் முதலீடு செய்யமுடியும்.

SCROLL FOR NEXT