வணிகம்

பிஎஸ்இ ஐபிஓ: 51 மடங்கு விண்ணப்பங்கள்

செய்திப்பிரிவு

பிஎஸ்இயின் பொதுப்பங்கு வெளி யீடு திங்கள்கிழமை தொடங்கியது. பிஎஸ்இ திட்டமிட்டிருந்த தொகையில் 50 சதவீதம் அளவுக்கு திங்கள்கிழமை விண்ணப்பங்கள் குவிந்தன. இரண்டாம் நாள் முடிவில் 1.55 மடங்குக்கு விண் ணப்பங்கள் வந்தன. நேற்றைய முடிவில் 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

மொத்த பங்குகளின் எண் ணிக்கை 1,07,99,039. ஆனால் 55,08,50,616 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த ஐபிஓ நேற்றுடன் முடிவடைந்தது. சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 6.14 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

இந்த பங்கு வெளியீடு மூலம் ரூ.1,243 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலையாக 805-806 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT