வணிகம்

வரி தாக்கல் செய்ய கட்டாயம்; நிறுவன இயக்குநர் குழுவில் சேர ஆதார் எண் அவசியம்

பிடிஐ

நிறுவனங்களின் இயக்குநர் குழு வில் சேரவும், நிறுவனங்களின் வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அடிப் படையிலான பயோமெட்ரிக் முறை யில் விரல் ரேகைப் பதிவு கட்டாய மாகிறது என்று மத்திய நிறுவன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங் களில் இயக்குநர் குழுவில் நியமிக் கப்படுவோர் அவரது அனுமதியோ அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் நியமிக்கப்படுகின் றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு நியமிக்கப்படுவோரின் ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவை கட்டாயமாக்குவது என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இயக்குநர் அடையாள எண் (டிஐஎன்) பெற வேண்டுமெனில் அவர்கள் ஆதார் அடையாள அட்டை தாக்கல் செய்ய வேண்டும் என நிறுவன அமைச்சகம் தெரிவித் துள்ளது.

இனி வரும் காலங்களில் `டின்’ தேவைப்படுவோர் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அவர் தாக்கல் செய்யும் உண்மை விவரங்களுக்குச் சான்றாக ஆதார் எண் மற்றும் விரல் ரேகைப் பதிவும் உடன் இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அரசால் நியமிக்கப் படுவோர், வங்கியால் நியமிக்கப் படுவோர் மற்றும் நிதி நிறுவனங் களால் நியமிக்கப்படுவோருக்கும் விரல் ரேகைப் பதிவு கட்டாய மாகிறது. இதேபோல நிறுவனச் செயலர்களும் இத்தகைய நடை முறையைப் பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

`டின்’ வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை உருவாக்கு மாறு இன்ஃபோசிஸ் நிறுவனத் திடம் கேட்கப்பட்டுள்ளது. படிப் படியாக ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் இயக்குநர்களுக் கான அடையாள எண் வழங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. இது முழுமையாக செயல்படுத்தப்படும்போது, குறிப் பிட்ட இயக்குநரின் விரல் ரேகைப் பதிவு இல்லாமல் நிறுவனத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை எவரும் பார்க்க இயலாது. வெளிநாடுகளில் வசிக்கும் இயக்குநர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன அமைச்சகத்தின் இந்த முடிவு உச்ச நீதிமன்றத் தீர்ப்பி லிருந்து எந்த வகையிலும் வேறுபடாது. ஆதார் அடையாள எண்ணை, குறிப்பிட்ட நபரின் அடையாளம் காண பயன்படுத்த லாம் என நீதிமன்றம் தெரிவித் திருப்பதால் இந்த நடைமுறை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதிகாரிகள் தெரிவிக்கின் றனர்.

இந்த ஆண்டு முதல், வரித் தாக்கல் செய்யும்போது ஆதார் எண் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT