வணிகம்

விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிவு

செய்திப்பிரிவு

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் முதல் காலாண்டு நிகர லாபம் 6.7 சதவீதம் சரிந்து ரூ.2,059 கோடியாக உள்ளது. நிறுவனம் நேற்று ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.2,207.4 கோடியாக இருந்தது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 13,697.6 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இது ரூ.12,370 கோடியாக இருந்தது.

2016 செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஐடி சேவை மூலமான வருமானம் 19.31 கோடி டாலர் முதல் 19.50 கோடி டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது. ஐடி சேவைத்துறையில் 2016 ஜூன் 30-ம் தேதிவரை 1.73 லட்சம் பணி யாளர்கள் உள்ளனர். ஐடி புராடக் டுகள் மூலமான வருமானம் ரூ.590 கோடியாக உள்ளது.

ஐடி சேவையின் லாப வரம்பு 17.8 சதவீதமாக உள்ளது என்று தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் குறிப்பிட்டுள்ளார். இது ஜனவரி- மார்ச் காலாண்டில் 19.7 சதவீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT