வணிகம்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஹீரோ ‘அச்சீவர்’ அறிமுகம்!

பிடிஐ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 150 சிசி மோட்டார் சைக்கிளை நேற்று அறிமுகப்படுத்தியது. ஹோண்டா அச்சீவர் என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 61,800 ஆகும். டிஸ்க் பிரேக் வைக்கப்பட்ட மோட்டார் சைக்கி ளின் விலை ரூ. 62,800 ஆகும்.

நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கி 7 கோடி மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள் ளது. இதைக் கொண்டாடும் வகையில் மூன்று வண்ணத்தில் சிறப்பு தயாரிப்பாக 70 மோட் டார் சைக்கிளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள் ளது. புதிய மோட்டார் சைக்கிள் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு பெட்ரோலில் இயங்கும். 13.6 பிஎஸ் மற்றும் 12.8 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 5 ஸ்பீடு கியர் ஆகியன இந்த மாடலின் சிறப்பம்சங்களாகும்.

எரிபொருள் சிக்கனத்துக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் 110 மாடலில் உள்ள தொழில் நுட்பம் இதிலும் பொறுத்தப்பட் டுள்ளது. அதாவது சில விநாடி கள் இன்ஜின் நியூட்ரலில் இயங் கினால், ஆஃப் ஆகிவிடும். அதா வது சிக்னலில் நிற்கும் போது இன்ஜின் ஆப் ஆகி மீண்டும் இன்ஜினை இயக்க கிளட்சைப் பிடித்தாலே ஸ்டார்ட் ஆவதைப் போன்ற நுட்பம் இதில் உள்ளது.

குர்காவ்னில் ஹீரோ அச்சீவர் 150சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பவன் முஞ்ஜால்.

SCROLL FOR NEXT