தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (டிஎம்பி) ‘மாஸ்டர்கார்டு’ நிறுவனத் துடன் இணைந்து புதிய கிரெடிட், டெபிட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் 2 கிரெடிட் கார்டுகள், 3 டெபிட் கார்டுகள் மற்றும் ஒரு மல்டி கரன்சி பயண கார்டு என 6 வகையான கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி யின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி உபேந்திர காமத், சென்னை ரிசர்வ் வங்கியின் பேமெண்ட் மற்றும் செட்டில்மெண்ட் துறை பொது மேலாளர் கமல் பட்நாயக், மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் விகாஷ் வர்மா, துணை தலைவர் ராஜேஷ் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
டைட்டானியம் கிரெடிட் கார்டு:
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் மற் றும் அதற்குமேல் பெறும் வாடிக்கை யாளர்கள் இந்த கார்டை பெற முடியும்.
பிளாட்டினம் கிரெடிட் கார்டு:
மூன்று ஆண்டு காலத்திற்கு குறைந்தப்பட்சம் ரூ.50 ஆயிரம் டேர்ம் டெபாசிட் வைத்திருப்போர் இந்த கார்டை பெறலாம்.
டைட்டானியம் டெபிட் கார்டு:
அனைத்து வாடிக்கையாளரும் இந்த கார்டை பெற முடியும். கார்டில் இஎம்வி சிப் மற்றும் வாடிக்கை யாளரின் புகைப்படம் இடம்பெறும்.
பிசினஸ் டெபிட் கார்டு:
வணி கத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர் கள் இந்த கார்டை பெற முடியும். சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் களை விட அதிகமாக எடுக்கலாம்.
டைட்டானியம் கான்டாக்ட் லெஸ் டெபிட் கார்டு:
ரகசிய குறியீடு எண் கிடையாது. பொருட்கள் வாங்கும் இடங்களில் இதற்கென வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் சில விநாடிகள் கார்டை காண்பித்தால் போதும் வேகமாக பரிவர்த்தணை முடிந்துவிடும்.
மல்டி கரன்சி டிராவல் கார்டு:
வெளிநாடு செல்லும் வாடிக்கை யாளர்கள் இந்த கார்டைப் பயன் படுத்தலாம்.