ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடி வுக்கு வரும் நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்ன ராக உர்ஜித் படேல் நியமிக்கப் பட்டுள்ளார். உர்ஜித் படேலை அடுத்த ரிசர்வ் வங்கியின் கவர்ன ராக நியமித்திருப்பது தற்போது உள்ள கொள்கைகளை ரிசர்வ் வங்கி தொடரும் என்பதையே காட்டுவதாக தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் கூறியுள்ளது.
நேற்று ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக உர்ஜித் படேல் அறிவிக் கப்பட்டதை தொடர்ந்து இந்த கருத்தை பிட்ச் நிறுவனம் கூறி யுள்ளது. மேலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு புதிய கவர்னருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து பிட்ச் தர மதிபீட்டு நிறுவனத்தின் இயக்குநர் தாமஸ் ரூக்மாக்கர் கூறியதாவது: தற்போது கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் உர்ஜித் படேல் அதிக பணவீக்கத்திற்கு எதிராகவும் போரிட வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கிகளின் மோசமான நிலையில் உள்ள நிதிநிலை அறிக்கைகளை சரிசெய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. மேலும் தற்போதுள்ள கொள்கைகளை தொடரப்படும் என்பதையே உர்ஜித் படேல் நியமனம் தெரிவிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக துணை கவர்னராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். வருங்காலத்தில் முக்கிய கொள் கைகளை கொண்டுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் பிரமுகர்களை வைத்து தர மதிப்பீடுகளை வழங்குவதில்லை. ஆனால் கொள்கைகளை வைத்து தர மதிப்பீடுகள் வழங்கப்படும். பணவீக்கத்தை குறைக்கவும் வங்கி அமைப்பை சரி செய்வதற்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து தேவை யில்லை. இவ்வாறு ரூக்மேக்கர் தெரிவித்தார்.