எல் அண்ட் டி குழுமத்தை சேர்ந்த எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் ஐபிஒவுக்கு 11-மடங்குக்கு மேல் முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. இந்த நிலையில் எல் அண்ட் டி டெக்னாலஜி நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
இந்த ஐபிஓ மூலம் எல் அண்ட் டி டெக்னாலஜி நிறுவனத்தில் இருந்து 15 சதவீத பங்குகளை விற்க எல் அண்ட் டி திட்டமிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் இன்ஜினீயரிங் அனல்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வருகிறது.
எல் அண்ட் டி நிறுவனத்தில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் பிரிக்கப்பட்டது. அப்போது எல் அண்ட் டி இன்டகரேடட் இன்ஜினீயரிங் சர்வீசஸ் என்னும் பெயரில் இந்த நிறுவனம் செயல்பட்டது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,142 கோடியாக இருந்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.416 கோடியாக இருந்தது.