வணிகம்

தேர்தல் வெற்றியால் சீர்திருத்தங்கள் தொடரும்: தொழிற்துறை நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு அதிகரிக்கும், அதனால் சீர்த்திருத்தங்கள் தொடரும் என தொழிற்துறையினர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அசோசேம் தலைவர் சந்தீப் ஜஜோயா கூறும்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளில் ஒரே கட்சி இருப்பதால் இரு அரசு களிடமும் நல்ல உறவு இருக்கும். பொருளாதார மேம்பாட்டினை எதிர்நோக்கி இருக்கும் மாநில அரசுக்கு சாதகமாகும் என கூறினார்.

இந்த வெற்றி மூலம் சீர்த் திருத்தங்கள் தொடரும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது.

பங்குச் சந்தையில் ஏற்றம்

பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும் என்னும் நம்பிக்கையில் நாளை பங்குச்சந்தை வர்த்தகத் தில் ஏற்றம் இருக்கும் என பெரும்பாலான வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். அதனால் தேர்தல் முடிவு கள் நாளை பங்குச் சந்தையில் எதிரொலிக்கும்.

இரு முக்கியமான மாநிலங் களில் மத்தியில் ஆளும் பாஜக வெற்றி பெற்றிருப்பதால், மாநி லங்களவையில் பாஜகவின் பலம் உயரும். இதனால் சீர்த்திருத்தங்கள் தொடர்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதனால் பங்குச் சந்தையில் அதிக ஏற்றம் இருக்க கூடும் என டிரேட் ஸ்மார்ட் ஆன்லைன் நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சிங்கானியா தெரிவித்தார்.

இந்த வெற்றி மூலம் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் குறுகிய காலத்தில் சந்தையில் ஏற்றம் இருக்கும். சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொடும் என சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் நாயக் தெரிவித்தார். மேலும் பல சந்தை வல்லுநர்களும் இந்திய பங்குச்சந்தை உயரும் என்னும் கருத்தினை தெரிவித் திருக்கிறார்கள். இருந்தாலும் பிப்ரவரி மாத பணவீக்கம் குறித்த தகவல்கள் நாளை வெளியாக இருக்கின்றன. இந்த தகவல்கள் சந்தையின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தகூடும்.

நாளை காலை பங்குச்சந்தையில் ஏற்றம் நிச்சயம் இருக்கும். அதனை மறுக்க முடியாது. ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறித்த முடிவு புதன் கிழமை வெளியாக இருக்கிறது. இந்த முடிவுகளை வைத்துதான் இந்த வாரம் வர்த்தகத்தின் போக்கினை தீர்மானிக்க முடியும் என ஜியோஜித் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆனந்த் ஜேம்ஸ் தெரிவித்தார்.

அந்நிய முதலீடு ரூ.10,000 கோடி

இந்த மாதத்தில் இதுவரை ரூ.10,000 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தாரகண்ட் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால் அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கும் என்னும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த மாதத்தில் இதுவரை இந்திய பங்குச்சந்தைக்கு ரூ.9,628 கோடியும், இந்திய கடன் சந்தைக்கு ரூ.660 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது.

SCROLL FOR NEXT