பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிக மாக நடந்து வருகிறது. அதனால் வரும் 2020-ம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்ட் மற்றும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களுக்கான தேவை இருக்காது என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதி காரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக் கான நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியா தொழில் நுட்பத்தை பயன்படுத்தவதில் பல துறைகளில் புதுமைகளை படைத்துவருகிறது. நிதிச்சேவை கள் மட்டுமல்லாமல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இதர துறைகளிலும் புதுமைகளை படைத்து வருகிறோம்.
என்னுடைய கணிப்புபடி வரும் 2020-ம் ஆண்டில் டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் பாயின்ட் ஆப் சேல் எந்திரங்களுக்கு தேவையே இருக்காது. மத்திய அரசு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று அமிதாப் காந்த் கூறினார்.