வணிகம்

வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்த அரசு புதிய வழி

செய்திப்பிரிவு

வெங்காய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அரசு புதிய வழியைக் கையாண்டுள்ளது. இதன்படி ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலை டன்னுக்கு 1,150 டாலராக அரசு நிர்ணயித்துள்ளது.

ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டில் வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த செப்டம்பரில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு 900 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு 650 டாலராக இருந்தது.

அரசு நிர்ணயித்த விலைக்குக் குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காய ஏற்றுமதியைக் குறைக்கும் நோக்கில் சமீபகாலத்தில் அரசு மூன்று முறை ஏற்றுமதி விலையை உயர்த்தி யுள்ளது. இதனால் ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் உள்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 60 முதல் ரூ. 70-க்கு விற்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயம் டன்னுக்கு 1,150 டாலருக்குக் குறைவாக இருக்கக் கூடாது என வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் (டிஜிஎப்டி) தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT