வணிகம்

தானியங்கி ஆல்டோ அடுத்த மாதம் அறிமுகம்

செய்திப்பிரிவு

தானியங்கி கியர் உடைய ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்தமாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இத்தகைய கார்களுக்கு வரவேற்பு உள்ளதைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்து ரக கார்களிலும் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விலை 4 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் மேலும் பல மாடல் கார்களையும் தானியங்கி முறையில் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருக்கிறது.

ஏற்கெனவே செலிரியோ தானியங்கி முறையில் மாருதி அறிமுகம் செய்துவிட்டது. அதன் தொடர்சியாக ஆல்டோவை அறிமுகம் செய்ய இருக்கிறது. செலிரியோ காருக்கு இதுவரை 83,500 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வாகனத்துக் கான தேவையும் அதிகமாக இருக்கிறது. இதேபோன்ற வரவேற்பு ஆல்டோவுக்கு இருக்கும் என்று மாருதி தெரிவித்திருக்கிறது.

இருந்தாலும் இந்த புதிய மாடல் காரின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கார் அறிமுகப்படுத்தப்படும்போது விலை அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT