வணிகம்

வங்கித் துறை பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.1.44 லட்சம் கோடி

பிடிஐ

கடந்த மே மாதத்தின் முடிவில் வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடு ரூ.1.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி பங்குகளின் மதிப்பு முதலீட்டுக்கு ஏற்றவையாக இருந்ததால் இந்த பங்குகளில் மியூச்சுவல் பண்ட் மேனேஜர்கள் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். இதுவரை அல்லாத அளவுக்கு வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இதே காலத் தில் (மே மாத முடிவில்) ரூ.90,014 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. பண்ட் மேனேஜர்கள் வங்கி துறை பங்குகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வரு கின்றனர்.

``மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் நிதித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. வங்கி பங்குகளின் மதிப்பு குறைவாக இருப்பது மற்றும் கார்ப்பரேட் கடன்கள் அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரித்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்’’ என்று மார்னிங்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் ஆலோசகர் பெலபுர்கர் தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி’ நேற்று முன்தினம், நெருக்கடியான நிலையில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு வங்கி பங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.1,34,596 கோடியாக இருந்தது.

SCROLL FOR NEXT