வணிகம்

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 31,494 புள்ளிகளுடன் புதிய உச்சம்

செய்திப்பிரிவு

வியாழனன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 211 அதிகரித்து 31,494 புள்ளிகள் என்ற அனைத்து கால உச்சத்தை எட்டியது.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்தியதால் இந்த புதிய உச்சம் சாத்தியமானதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதனன்று அயல்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நுழைவதற்கான விதிமுறைகளை செபி தளர்த்தியது. மேலும் சில தேவைகளையும் எளிமைப்படுத்தியது.

இதற்கு முன்பாக ஜூன் 6-ம் தேதி சென்செக்ஸ் 31,430.32 புள்ளிகளை எட்டியது, இன்று அதனைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

தேசியப் பங்குச் சந்தையின் என்.எஸ்.இ. குறியீடு 46.30 புள்ளிகள் உயர்ந்து 9,679.90 என்று இருந்தது.

இந்த உயர்வில் பயனடைந்த நிறுவனங்கள், சன் பார்மா, எச்.டி.எஃப்.சி, எம்&எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பாங்க் ஆகியவையாகும்.

SCROLL FOR NEXT