வணிகம்

இந்தியாவில் அமேசான் ரூ.20,000 கோடி முதலீடு

பிடிஐ, ஐஏஎன்எஸ்

இந்தியாவில் சர்வதேச இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் சுமார் ரூ.20,000 கோடியை (300 கோடி டாலர்) முதலீடு செய்ய திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனர் ஜெப் பியோஸ் இதனைத் தெரிவித்தார். மேலும் கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் அமேசான் என்ன செய்ததோ அதனை இந்தியாவில் செய்ய திட்ட மிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிறுவனம் 2013-ம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப் பட்டது. இந்தியாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனங்களாக பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங் களின் போட்டியை சமாளிக்க இதுவரை சுமார் ரூ.13,000 கோடி (200 கோடி டாலர்) அமேசான் முதலீடு செய்திருக்கிறது. இப் போது புதிதாக ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அமே சான் அறிவித்திருந்தாலும் எவ் வளவு காலத்தில் முதலீடு செய் யப்படும் என்பதை ஜெப் பியோஸ் அறிவிக்கவில்லை.

உள்நாட்டு நிறுவனங்கள் புதிதாக நிதி திரட்ட சிரமப்படும் சூழ்நிலையில் அமேசான் இந்த முதலீட்டை செய்திருப்பது குறிப் பிடத்தக்கது. கடந்த ஏழு வருடங் களில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்கள் திரட்டிய தொகையை விட அமேசான் முதலீடு செய்த மற்றும் முதலீடு செய்ய உறுதி அளித் திருக்கும் தொகை அதிகமாகும்.

இதுவரை அமேசான் நிறுவனம் 45,000 நபர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று ஜெப் கூறியிருக்கிறார். புதிதாக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் தொகையை செயல்பாட்டு மையங்கள் மற்றும் டேட்டா சென்டர் அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வ தேச அளவில் இன்னொரு முக்கிய நிறுவனமான அலிபாபா இந்தி யாவில் நேரடியாக இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்க திட்டமிட்டி ருப்பதால், அமேசான் கூடுதல் முதலீடு செய்கிறது என்று இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக் கின்றனர்.

தற்போது இந்திய இ-காமர்ஸ் சந்தை 500 கோடி டாலராக இருக்கிறது. அடுத்த நான்கு வருடங்களில் 6,000 கோடி டால ராக உயரும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. வருங் காலங்களில் இந்திய இகாமர்ஸ் சந்தையில் அலிபாபா மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டம்

2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை 2,800 கோடி டாலர் தொகையை அமெரிக்க நிறுவனங் கள் முதலீடு செய்துள்ளன. மேலும் ரூ.3 லட்சம் கோடி (4,500 கோடி டாலர்) தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க இந்திய தொழில்துறை குழுவின் (யூஎஸ்ஐபிசி) தலைவர் ஜான் சேம்பர்ஸ் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு செப்டம்பரில் 4,100 கோடி டாலரை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டன. இப்போது இரண்டு வருடங்களுக்கு 2,800 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுவிட்டன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 4,500 கோடி டாலரை முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்று ஜான் சேம்பர்ஸ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெப்சிகோ, மாஸ்டர்கார்டு,வார்பர்க் பின்கஸ், போயிங் எமர்சன், 8மினிட் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களை மோடி சந்தித்தார்.

SCROLL FOR NEXT