குளச்சல் அருகே உள்ள இனையத்தில் அமையவுள்ள துறைமுகம் 3 ஆண்டுகளில் செயல் பட உள்ளது. இது செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை செலவு மீதமாகும் என்று தூத்துக்குடி வ.உ. சிதம்ப ரனார் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவரும் இனையம் துறைமுக திட்ட சிறப்பு அதிகாரியுமான சு. நடராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ. 25 ஆயிரம் கோடி மதிப் பிலான இத்திட்டத்துக்கு சமீபத் தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச் சரவை குழு ஒப்புதல் அளித் துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்போது துறைமுகங் களின் தேவை அவசியமாகும். அதைக் கருத்தில் கொண்டே இத்துறைமுகத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
‘தொழில்நுட்ப-பொருளாதார செயலாக்க அறிக்கை’ தயாரிப்பின் போது கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளான மணவாள குறிச்சி, குளச்சல், இனையம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகள் பெரிய துறைமுகம் அமைப்பதற் காக, தீவிர ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டன. ஆய்வு முடிவில், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளை இணைக்கும் சர்வதேச கடல்வழி தடத்தின் அருகில் பெரிய துறைமுகம் அமைப்பதற்கான அமைவிடம் சாதகமான சுற்றுப் புறம் மற்றும் சாலை, ரயில் இணைப்பு வசதிகள், போதுமான அளவு இயற்கையான கடல் ஆழம் ஆகிய காரணிகளின் அடிப் படையில் குளச்சல்-இனையம் இடையே இனையம்-பொருத்த மானது என்ற பரிந்துரையின் அடிப்படையில் இத்துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பகுதி குறைந்த கடல் அரிப்பு மற்றும் மணல் குவிப்பு உள்ள பகுதி என அண்ணா பல்கலைக் கழகத்தில் செயல்படும் தேசிய ஸ்திரமான கடல் நிர்வாக மையம் கண்டறிந்துள்ளது.
துறைமுகம் பகுதி, சரக்கு கள் கொண்டு செல்ல அமையவிருக்கும் புதிய சாலை மற்றும் இரயில் வழித்தடங்கள் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இரயில் தடத்தினின்று மக்களின் சொத்துக்களுக்கும் உடைமை களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக் கும் பாதிப்புவராத வகையில் அரசின் விதிகளுக் குட்பட்டு நவீன ஆய்வுப்பணிகள் மத்திய கப்பல் துறை அமைச் சகம் மூலமாக மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளில் பெரிய துறைமுகங்கள் அருகருகே செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் சென்னை, எண்ணூர், காட்டுப் பள்ளி துறைமுகங்கள், மஹாராஷ் டிரத்தில் மும்பை ஜவஹர்லால் நேரு, வாதவான் துறைமுகங்கள் அருகருகே சிறப்பாக செயல்படுகின்றன.
இந்தியாவில் இதுவரை 16 மீட்டர் மிதவை ஆழ பெரியகப்பல்களில் (18,000 டிஇயு) சரக்கு பெட்டகங்களை கையாளும் நவீன துறைமுகங்கள் (மேற்கு கிழக்கு சர்வதேச கப்பல் வழிதடம் அருகில்) இல்லாததால், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சரக்குப் பெட்டக கப்பல்கள் கொழும்பு துறைமுகம் செல்கின்றன. குளச்சலில் 16 மீ மிதவை ஆழ அதிநவீன துறைமுகம் அமைக்கப்படும் போது இந்திய சரக்கு பெட்டகங்கள் கொழும்பு செல்லாமல் நேரடியாக குளச்சல் துறைமுகத்திலிருந்து உலக துறைமுகங்களுக்கு செல்லும். இதனால் செலவினங்கள் குறைந்து இந்தியாவிற்கு இப்பொழுது ஆண்டு ஒன்றிற்கு ஏற்படும் 1,500 கோடி ரூபாய் வருமான இழப்பு முற்றிலும் தவிர்க்கப்படும் என்று நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.