உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் 9.01 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,34,244 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இந்த ஆண்டில் 2,55,359 வாக னங்கள் விற்பனையாகி உள்ளன. கார் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது 4.9% உயர்ந் துள்ளது. இந்திய வாகன உற்பத்தி யாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் மேலும் கூறி யுள்ளதாவது.
பயணிகள் கார் விற்பனை கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பண மதிப்பு நீக்கத்தின் காரணமாக எழுந்த பொருளாதார தேக்கத்தி னால் 4.4% அளவுக்கு கார் விற்பனை சரிந்தது. ஆனால் 2017 ஜனவரி மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 14.4% அதிகரித் துள்ளது. உள்நாட்டு கார் விற்பனை 10.83% அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரியில் 1,68,303 கார்கள் விற்பனையான நிலையில் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,86,523 கார்கள் விற்பனையாகி உள்ளன. பிப்ரவரியில் ஒட்டுமொத்த மாக 17,19,699 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.