இந்தியாவின் சோயா ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் மிகுந்த தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சோயா ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 1.83 லட்சம் டன் சோயா ஏற்றுமதியாகியுள்ளது.
வெளிநாடுகளில் கால்நடைத் தீவனமாக சோயா பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10,006 டன் சோயா ஏற்றுமதியானதாக சோயா ஏற்றுமதி மற்றும் பதப்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
மிக அதிக அளவில் ஈரான் இறக்குமதி செய்துள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது அதற்கான மதிப்பு டாலரில் வழங்க வேண்டும் சர்வதேச தடை காரணமாக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை உள்ளது. இதனால் ரூபாயிலேயே கச்சா எண்ணெய் அளிக்க ஈரான் முன் வந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சோயா மதிப்புக்கு கச்சா எண்ணெய் அளிக்க ஈரான் சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.