சர்வதேச அளவில் முன்னணி ஊடகத்துறை நிறுவனமான புளூம்பெர்க் குழும நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
அட்லாண்டிக் மீடியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
தி எகானமிஸ்ட் பத்திரிகையின் உத்திகள் வகுக்கும் குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவின் சார்பாக புர்கினா பக்ஷே நாட்டில் வெளியுறவு தூதரக அதிகாரியாக பணியைத் தொடங்கியவர்.
டிஜிட்டல் மீடியா, டெலிவிஷன், ரேடியா, அச்சு ஊடகம் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
பிரேக்கிங் மீடியா என்ற நிறுவனத்தை தொடங்கியவர்.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வெளியுறவு கொள்கைகள் பிரிவில் பிஎஸ் பட்டம் பெற்றவர்.
வெளிநாட்டு உறவுகள் கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறார்.