ராணுவ தளவாட உற்பத்தியில் தனியாருடன் சேர்ந்து தயாரிக்கும் இந்தியாவின் முயற்சியின் காரணமாக ராணுவ உதிரி பாக உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா மிகச் சிறந்த உற்பத்தி கேந்திரமாக உருவாகும் என்று மத்திய நிதி மற்றும் ராணுவ அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை ராணுவ உதிரிபாக ஆலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது: எந்த ஒரு நாடும் போரின்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் ராணுவ சாதனங்கள் மூலம் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. ராணுவ தேவையில் சுய சார்பு நிலையை எட்டும்போதுதான் வெற்றி வசமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
உத்தி சார் அடிப்படையிலான கூட்டுறவு (எஸ்பி திட்டம்) மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்தும் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதன் மூலம் ராணுவ உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றமுடியும். இத்துறையில் நமது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
எஸ்பி திட்டம் மூலம் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களோடு சர்வதேச அளவில் ராணுவ உதிரி பாகங்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள் கூட்டுசேரும். குறிப்பாக விமானப்படை ஜெட், ஹெலிகாப்டர் மற்றும் நீர்மூழ்கி தயாரிப்பில் இணைந்து செயல்பட முன்வரும். மேக் இன் இந்தியா திட்டம் இதற்கு வழிவகை செய்கிறது என்று குறிப்பிட்டார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் (டிஆர்டிஓ) மந்தமான செயல்பாடு மற்றும் இந்தியாவில் ராணுவ உதிரி பாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 பொதுத்துறை நிறு வனங்கள், 4 கப்பல் கட்டும் தளங்கள், 41 தளவாட உற்பத்தி ஆலைகள் ஆகியன இருந்தும் இவற்றால் தனியார் நிறுவனத்தைக் கவர முடியவில்லை. இதனாலேயே இந்தியாவின் ராணுவ தளவாட தேவையில் 65 சதவீதம் இறக்குமதியை நம்பி இருக்கவேண்டிய சூழல் உள்ளது.
பொதுவான புவி சூழல் அமைப்பை விட நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பொறுத்தே பாதுகாப்பு சாதனங்களின் தேவை அவசியமாகிறது. எந்த சமயத்திலும் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் நிலைமையில் நாம் இருக்க வேண்டும். அதுதான் இப்பிராந்தியத்தின் தேவையாக உள்ளது என்று ஜேட்லி சுட்டிக் காட்டினார்.
எஸ்பி திட்டமானது பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனி யார் நிறுவனங்களிடையே ஆரோக் கியமான போட்டி சூழலை உருவாக் கும். இதன் மூலம் அரசுத்துறை நிறு வனங்களின் செயல்திறன் மேம் படும். போட்டி சூழலில்தான் மிகச் சிறந்த தயாரிப்பு கள் உருவாகும், விலையும் கட்டுபடியாகக் கிடைக் கும். மேலும் பொருள் தேர்வுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய பொருளா தாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக நாம் எட்டாத வளர்ச்சியை கடந்த 3 ஆண்டுகளில் எட்டி சர்வதேச அளவில் வளரும் பொருளாதார நாடாக உருவாகி யுள்ளோம். வளரும் பொருளாதாரத் திலிருந்து வளர்ந்த பொருளாதார நாடாக நாம் உயர்வதே நோக்கம் என்றார் ஜேட்லி.