ஆன்லைன் வர்த்தக நிறுவ னமான அமேசான் நிறுவனத் தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி. 2005-ம் ஆண்டி லிருந்து இந்தப் பொறுப்பில் உள்ளார். 2004-ம் ஆண்டில் ஆராய்ச்சி பிரிவு இயக்குநராக இருந்தார்.
1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றினார்.
1991 முதல் 1994-ம் ஆண்டுவரை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான இன்செக் நிறுவனத்தில் முதன்மை ஆராய்ச்சி பொறியாளராக இருந்தார்.
நெதர்லாந்தில் உள்ள விரிஜி பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்.
தொழில் உருவாக்கம், குறைந்த செலவில் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, பிசினஸ் தேவைகளுக்கு ஏற்ப துல்லியமான தொழில்நுட்ப தீர்வுகளை அளிப்பதில் வல்லுநர்.
ரோபோட்டிக் தொழில்நுட்பங்களில் நிபுணர்.
அமேசான் இணையதள செயல்பாடுகளை சர்வதேச அளவில் கட்டமைத்ததில் முக்கியமானவர்.