ஐரோப்பிய சூழ்நிலைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்தன. சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 61 புள்ளிகள் சரிந்து 26995 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. நிப்டி 8 புள்ளிகள் சரிந்து 8085 புள்ளியில் முடிந்தது.
முக்கிய குறியீடுகள் சரிந்தாலும் மிட்கேப் குறியீடு 0.97 சதவீதம் உயர்ந்தும் ஸ்மால்கேப் குறியீடு 1.46 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தன. ஹெல்த்கேர் குறியீடு அதிகபட்சமாக 1.73 சதவீதம் சரிந்து முடிந்தது. இதற்கடுத்து மெட்டல் 1.08%, ரியால்டி 0.34% கன்ஸ்யூமர் டியுரபிள் 0.22 சதவீதம் சரிந்து முடிந்தன. மாறாக கேபிடல் குட்ஸ் 0.66%, பவர் 0.57% மற்றும் எப்.எம்.சி.ஜி 0.52 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் எஸ்.பி.ஐ, பி.ஹெச்.இ.எல்., ஹீரோமோட்டோ கார்ப், டாடா பவர் மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் உயர்ந்தும் சன்பார்மா, ஓ.என்.ஜி.சி. கோல் இந்தியா, விப்ரோ மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
தங்கம் விலை குறைவு
மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரியில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1245 டாலரை தொட்டது. இப்போது ஒரு அவுன்ஸ் 1240 டாலரை தொட்டது. டாலர் இண்டெக்ஸ் உயர்ந்தது.வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் விலை குறைந்துவருகிறது.