வணிகம்

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு

ஐஏஎன்எஸ்

நேற்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. நேற்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்ட கடைசிக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. சிஆர்ஆர் விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கிறது. கடந்த ஜூன் 7-ம் தேதி நடந்த நிதிக் கொள்கை கூட்டத்திலும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மழை மற்றும் சரியான பருவ நிலை காரணமாக சிறப்பான வளர்ச்சியைக் காண முடிகிறது. விநியோக ரீதியிலும் உறுதியான மேலாண்மை உள்ளதால் உணவுப் பணவீக்க குறியீடு சிறப்பாக உள்ளது என்று ராஜன் குறிப்பிட் டுள்ளார்.

பணவீக்கத்தை மார்ச் 2017-க் குள் 5 சதவீதம் என்கிற அளவுக் குள் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி ஏற்கெனவே இலக்கு நிர்ணயித்துள்ளது.

வழக்கமான மழை அளவு காரணமாக விவசாய உற்பத்தி மற்றும் நகர்ப்புற தேவைகளின் குறியீடுகள் உயர வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட ராஜன், ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தால் மக்கள் நுகர்வு தேவைக்காக செலவிடுவதும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (GST) சிறப்பான இடத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறையால் அரசின் நிதிநிலைமை மற்றும் முதலீட் டாளர்களின் எண்ணங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT