வணிகம்

ஏற்றுமதி உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்

பிடிஐ

ஏற்றுமதி சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான புதிய திட் டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்றுமதிக்கான வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம் (TIES) என்கிற இந்த புதிய திட்டம் தேசிய அளவில் ஏற்றுமதி சார்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக இருக்கும். இந்த திட் டத்தை அறிமுகப்படுத்தி வைத்து மத்திய வர்த்தகத் துறை அமைச் சர் நிர்மலா சீதாராமன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது;

இந்த திட்டம் ஏற்றுமதிக்கு முன்பும், அதற்கு பிறகும் வர்த்தக நடவடிக்கைகளில் உள்ள இடை வெளிகளை நிரப்பும் விதமாக இருக்கும். உள்கட்டமைப்பு பணிகளை உருவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், வர்த்தக நடவடிக்கைகளில் பங்கெடுத்து தொழில்முறையாக இயங்கத் தொடங்குவது மற்றும் வர்த்தகத்தை சீராகக் கொண்டு செல்வது வரை பங்கெடுக்கும் விதமாகவும் செயல்படும் என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய வர்த்தகத் துறை செயலர் ரீடா தியோஷியா, ஏற்றுமதி பரிசோதனை, கையா ளுகை செலவு மற்றும் துறை முகங்களில் குளிர்பதன கிடங்கு கள் உள்ளிட்ட செலவுகள் அதிகமாக உள்ளன. டைஸ் திட்டம், சுங்க சோதனை, போக்குவரத்து தொடர்புகளை உருவாக்குவது, ஒருங்கிணைந்த சோதனைக்கு கவனம் குவித்து செயல்படும் விதமாக இருக்கும்.

தரமான ஏற்றுமதி மற்றும் அதற்கான சான்றிதழ்களை உறுதிபடுத்துவது உட்பட ஏற்றுமதி கார்கோ சுமூகமாக அனுப்பப்படுவதுவரை இந்த திட்டத்தின் கீழ் உதவிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைறைக்கு வர உள்ளது, இதற்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் மூன்றாண்டுகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் மத்திய, மாநில அரசுகளின் சம அளவு பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT