உலக பொருளாதார மையத்தின் ஐந்து நாட்கள் மாநாடு டாவோஸில் நேற்று முன்தினம் தொடங்கியது. `பொறுப்புமிக்க அரசாங்கம் தேவை’ என்கிற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு கருத்தரங்க நிகழ் வுகள் நடைபெறுகின்றன. நேற்று தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் சீன அதிபர் ஸி ஜிங்பிங் பங்கேற்று உரையாற்றினார். நேற்று தொடங் கிய மாநாடு பொறுப்பு மற்றும் பொறுப்புமிக்க அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் அனைத்து நிறுவனங்களின் மீதும் நம்பிக்கை இழக்கும் சூழலில், நாடுகளின் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கை களை முன்வைத்து மாநாட்டு நிகழ்ச் சிகள் அமைந்துள்ளன. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மேம்பாடு மற்றும் ஏழை பணக்கார விகிதாச்சாரம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் திறன் போட்டி உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
முதல் நாள் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் உலக பொருளாதார மையத்தின் நிறுவனர் கிளாஸ் ஷ்வாப் வரவேற்பு உரையாற்றினார். பிரபல பாடகி ஷகிராவின் பாடல் நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங் கியது. இந்த பாடலில் அவர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தை வலி யுறுத்தினார். இதைத் தொடர்ந்து அனி-ஷோபி முட்டரின் வயலின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச் சியை ஸ்விட்சர்லாந்து பிரதமர் டோரிஸ் லூதர்ட் தொடங்கி வைத்தார். சீன அதிபர் ஸி ஜிங்பிங் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலை மைச் செயல் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவி லிருந்து டாடா சன்ஸ் குழும தலை வர் என். சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் முதல் முறையாக சீன அதிபர் ஜிங்பிங் கலந்து கொண்டு உரை யாற்றினார். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாடு துறைச் செயலர் ரமேஷ் அபிஷேக் உள்ளிட்ட மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
உலக பொருளாதார மையத்தின் இந்த ஆண்டு கூட்டம், உலக அளவி லான பல்வேறு நிச்சயமற்ற நிலை மைகள் குறித்து முக்கிய விவாதமாக எடுத்துக் கொள்கிறது. குறிப்பாக சர்வதேச பொருளாதாரத்துக்கு பொறுப்பு மற்றும் பொறுப்பான தலைவர்கள் தேவையாக இருக்கின்றனர் என்பதை முக்கிய விவாதமாக எடுத்துக் கொள்கிறது.
இதற்கிடையில் உலக பொருளா தார மையத்தின் பல்வேறு புள்ளி விவரங்கள் இந்தியாவின் பல்வேறு நம்பிக்கையூட்டும் விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. வெள்ளிக் கிழமை வெளியான உலக பொரு ளாதார மையத்தின் அறிக்கையான ‘வளர்ச்சியை உள்ளடக்கிய மேம் பாட்டுக்கான அறிக்கை 2017”-ல்
79 வளர்ந்த நாடுகளின் வரிசை யில் இந்தியா 60 வது இடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.