வணிகம்

மோட்டோ ஜி 5 அறிமுகம்

செய்திப்பிரிவு

செல்போன் தயாரிப்பில் முன் னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி5 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.11,999 ஆகும்.

கடந்த மாதம் இந்நிறுவனம் இதில் மேம்பட்ட மாடலான மோட்டோ ஜி5 பிளஸ் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய மாடல் அமேசான் இணை யதளத்தின் மூலம் விற்பனை செய்யப்படும். இது முழுவதும் உலோக டிசைனை அடிப்படை யாகக் கொண்டதாகும். மிக விரை வான செயல்பாடு, துல்லியமான கேமிரா ஆகியன இதன் சிறப்பம்சமாகும். ஏற்கெனவே சந்தையில் உள்ள ஜியோமி, மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனத் தயாரிப்புகளுக்குப் போட்டியாக இது களமிறக்கப்பட்டுள்ளது.

``கடந்த மாதம் மோட்டோ ஜி5 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது மோட்டோ ஜி 5 அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தை நிறுவனத்துக்கு மிக முக்கியமான சந்தையாகும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்பை அளிப்பதில் முன்னுரிமை தருகிறோம்,’’ என்று மோட்டரோலா இந்தியா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் சுதின் மாதுர் தெரிவித்தார்.

மோட்டோ ஜி (முதல் தலை முறை) அறிமுகம் செய்யப்பட்டதி லிருந்து இதுவரை 60 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி யுள்ளதாக அவர் மேலும் தெரிவித் தார்.

ஆண்ட்ராய்டு தளத்தில் செயல் படும் வகையிலான மோட்டோ ஜி, 5 அங்குல தொடு திரை, 1.4 கிகா ஹெர்ட்ஸ் குவால்காம், ஸ்நாப்டிரா கன், ஆக்டாகோர், 3 ஜிபி ராம், உள் நினைவகம் 16 ஜிபி (128 ஜிபி வரை நீடிக்கும் வசதி), 13 எம்ஜி பின்புற கேமிரா, 5 எம்பி முன்புற கேமிரா, 2,800 எம்ஏஹெச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டது.

SCROLL FOR NEXT