வணிகம்

விஜயா வங்கி, தேனா வங்கி, பிஓபி இணைப்பு ?

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளான விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வங்கிகள் இணைப்பு குறித்து மூன்று வங்கிகளின் இயக்குநர் குழு கூடி ஆராய உள்ளதாக மத்திய நிதி சேவைத்துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

வங்கித் துறைகளை சீரமைக்க வேண்டியது மிகவும் அவசிய மாகும். வங்கிகளுக்குத் தேவைப் படும் நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளை தொடர்ந்து செயல் படுத்துவது அல்லது வர்த்தகம் இல்லாத கிளைகளை மூடுவது, தேவைப்படும் இடங்களில் பிரதிநிதி கிளைகளை மட்டும் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை வங்கி கள் தீவிரமாக எடுத்து வருகின்றன.

வங்கிகளை ஒருங்கிணைப் பதன் மூலம் வாராக் கடன் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு உறுதிபட நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கித் துறையில் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் மற்றும் மஹிளா வங்கி யும் ஒன்றிணைக்கப்பட்டன. அதற்குப் பிறகு தற்போது இந்த மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது குறிப் பிடத்தக்கது. இணைப்பு வரை யில் இம்மூன்று வங்கிகளும் தன்னிச்சையாக செயல்படும். வங்கிகளின் செயல் திறன் மேம்படவும், வாடிக்கையாளர் களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும் வங்கிகள் இணைக்கப் படுவதாக அவர் கூறினார்.

-பிடிஐ

SCROLL FOR NEXT