விஜயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர்கோஸ்டா விமான நிறுவனம் பயணக் கட்டணத்தை குறைத்திருக்கிறது. இந்த கட்டணச் சலுகை செப்டம்பர் 11-ம் தேதி மாலை 4 மணி முதல் செப்டம்பர் 13 மாலை ஐந்து மணிவரை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதேபோல இந்த கட்டணச் சலுகை 149 நாட்களுக்கு மட்டுமே. அதாவது நவம்பர் 1, 2014 முதல் மார்ச் 28, 2015 வரை பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் சென்னை, கோவை, பெங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் விமானங்களை இயக்குகிறது.
இதன்படி சென்னையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பதிவு செய்யும் போது 1,999 ரூபாய்க்கு பயணம் செய்யலாம். கோவை வாடிக்கையாளர்கள் 2,499 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்.