வணிகம்

வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ. 31.66 கோடி செலவிடும் சீன இளைஞர் ஜஸ்டின் சன்

செய்திப்பிரிவு

பங்குச் சந்தையின் ஜாம்பவானாக அனைவராலும் அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பிட்காயினின் முன்னோடி என்று அழைக்கப்படும் ஜஸ்டின் சன் வென்றுள்ளார். இவர் ஏலம் கேட்ட தொகை 45.70 லட்சம் டாலராகும் (சுமார் ரூ. 31.66 கோடி).

சீனாவை சார்ந்த 29 வயதான ஜஸ்டின் சன், பிட்காயின் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால் பிட் காயின் குறித்த எதிர்மறை கருத்து உடையவர் பஃபெட். அவருடன் இந்த ஆண்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக தொகை தர முன்வந்துள்ளார் ஜஸ்டின்.

சான் பிரான்ஸிஸ்கோவில் செயல்படும் கிளைட் என்ற தன்னார்வ அமைப்புக்காக கடந்த 19 ஆண்டுகளாக இவ்விதம் நிதி திரட்டி அளித்து வருகிறார் பஃபெட். வீடில்லாதவர்கள், பசியில் வாடு வோருக்கு உதவும் தொண்டு நிறு வனமாக இது செயல்பட்டு வருகிறது.

மன்ஹாட்டனில் உள்ள ஹோட் டலில் நடைபெறும் விருந்தில் பிளாக் செயின் தொழில்நுட்பம் சார்ந்த 7 நண்பர்களை இந்த விருந்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஜஸ்டின் சன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT