வணிகம்

சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தை

செய்திப்பிரிவு

மூன்று நாள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் சிறிய ஏற்றம் பெற்றன. சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து 27061 புள்ளியிலும், நிப்டி 19 புள்ளிகள் உயர்ந்து 8105 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் 0.5 சதவீதம் வரை உயர்ந்து முடிவடைந்தன.

ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் மற்றும் ஆட்டோ குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. மாறாக மின் துறை குறியீடு அதிகளவில்(1.29%) சரிந்து முடிந்தது. இதற்கடுத்து கேபிடல் குட்ஸ், ரியால்டி மற்றும் மெட்டல் துறை பங்குகள் சரிந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் சிப்லா, மாருதி, பார்தி ஏர்டெல், ஐடிசி மற்றும் எஸ்.எஸ்.எல்.டி பங்குகள் உயர்ந்தும் ஹிண்டால்கோ, சன் பார்மா, டாடா பவர், என்.டி.பி.சி மற்றும் எல் அண்ட் டி பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

SCROLL FOR NEXT