தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) சேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்துக்கான வட்டியை 5 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
இது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக் கையாளர்களுக்கும் பொருந்தும். தினசரி அடிப்படையில் இந்த வட்டி கணக்கிடப்படும் என்று அறிக்கை ஒன்றில் இந்த வங்கி தெரிவித்திருக்கிறது. 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதத்தை குறைந்தபட்சம் நான்கு சதவீதமாக அறிவித்தது. அதேசமயம் வட்டியை நிர்ணயம் செய்வதற்காக விதிமுறையையும் ரிசர்வ் வங்கி தளர்த்தியது.
விதிமுறையை தளர்த்தப்பட்ட பிறகு யெஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கிகள் 4 சதவீதத்துக்கும் மேல் வட்டி கொடுக்கின்றன.