லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு ரூ. 5,100 கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது. ஒவ்வொன்றும் 660 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இதுவாகும். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த மின் நிலையங்கள் அமைப்பதற்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிங்காஜி அனல் மின் நிலையத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.