வணிகம்

லம்போர்கினியின் ‘ஹுராகேன்’ அறிமுகம்

ஐஏஎன்எஸ்

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள லம்போர்கினி நிறுவனம் ஹுராகேன் எனப்படும் ஸ்போர்ட்ஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 3.43 கோடியாகும்.

இந்நிறுவனத்தின் பிரபலமான 'கலார்ட்’ கார் பெருமளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை 14,022 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. அதிலி ருந்து இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியச் சந்தையில் இந்தக் கார் அக்டோபர் மாதம் டெலிவரி செய்யப்படும் என்று நிறுவனத்தின் இந்தியப் பிரிவு செயல் தலைவர் பவன் ஷெட்டி தெரிவித்தார்.

ஹுராகேன் கார் 5.2 லிட்டர் வி10 என்ஜின் கொண்டதாகும். 610 ஹெச்பி திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 325 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.

SCROLL FOR NEXT