வணிகம்

உற்பத்தித் துறை வளர்ச்சி அடையும்: தொழில்துறையினர் கருத்து

பிடிஐ

உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதற்காக ''மேக் இன் இந்தியா'' திட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியர்களால் தயாரிக்கப்பட்டது, ஆனால் உலகுக்கானது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் அதிக அளவிலான வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும்.

இந்த திட்ட பிரசாரம் மூலம் புதிய ஐடியாக்களை எளிதாக செயல்படுத்த முடியும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார். மேலும் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஐடியாக் களை செயல்படுத்த முடியும் என்றார். பிஸினஸ் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்கியதன் மூலம் இந்தத் துறைக்கும் சரியான நேரத்தில் அதிக முதலீடுகள் கிடைக்கம் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீராம் தெரிவித்தார்.

அதிகளவினான வேலை வாய்ப்பினை ஒவ்வொரு வருடமும் உருவாக்குவதற்கு இதுதான் சரியான வழி. மேலும் அனை வருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே மக்களின் வாங்கும் திறன் அதிகமாகும் என்றார். இந்த திட்டப்பிரசாரம் வெற்றி அடைவதற்கு சில காலம் ஆகலாம். ஆனாலும் உற்பத்தித் துறைக்கும் மிகுந்த உதவியாக இது இருக்கும். மேலும் தொழிலாளர் விதிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்த திட்டத்துக்கான முடிவு தெரியும் என்று பிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்தார். பிரதமரின் இந்த திட்டத்துக்கு முகேஷ் அம்பானி, சைரஸ் மிஸ்திரி, குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள்.

உற்பத்தித் துறையை ஊக்கு விக்க சில பிரச்சினைகளுக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். தேவை யான கட்டுமான வசதி, நிலை யான கொள்கைகள், வரி விகிதங் கள், இ- கவர்னன்ஸ், எனர்ஜி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்ட பிரசாரத் துக்கு எங்களை அர்பணிக்கத் தயார் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதன் மூலம் இந்த திட்டத்தை இன்னும் வலிமையாக்க முடியும் என்றார். அடுத்த 12-15 மாதங்களில் 1.25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க விரும்புவதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உருவாக்குவது மேக் இன் இந்தியா என்று ஐசிஐசிஐ வங்கி தலைவர் சாந்தா கொச்சார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT