வணிகம்

பிளிப்கார்ட்டுடன் நிஃப்ட் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

தேசிய ஆடை வடிவமைப்பு மையம் (நிஃப்ட்) ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி நிஃப்ட் மாணவர்களுக்கு தனியான லேபிள்களை வடிவமைக்க பிளிப்கார்ட் பயிற்சி அளிக்கும். அத்துடன் அதை சந்தைப்படுத்துவற்கான வாய்ப்புகளையும் பிளிப்கார்ட் உருவாக்கித் தரும்.

நிஃப்ட் மையத்துக்கு நாடு முழுவதும் அனைத்து நிலையிலுமான கலைஞர்கள் உள்ளனர். புத்தக ரீதியான படிப்புகளை நிஃப்ட் அளிக்கிறது. ஆனால் தொழில் ரீதியான அனுபவம் மாணவர்களுக்குக் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. இந்த இடைவெளியை பூர்த்தி செய்யும் பணியில் அதாவது கைவினை கலைஞர்கள், மாணவர்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கையை பிளிப்கார்ட் மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற கைவினை பொருள்களின் வடிவமைப்பு உள்ளிட்டவற்றை பார்த்து அறியும் வசதி நிஃப்ட் மாணவர்களுக்கு கிடைக்கும். நிஃப்ட் முன்னாள் மாணவர்கள் தங்களது தயாரிப்புகளை பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

SCROLL FOR NEXT