தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 10கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.27,000த்துக்கும் கீழ் விலை இறங்கியது.
ஜுவெல்லரிகளில் தங்கத்தின் தேவை குறைபாடு காரணமாக 10 கிராம் விலை 26,970 ஆகக் குறைந்துள்ளது.
நாணயம் தயாரிப்பு மற்றும் தொழிற்கூடங்களிற்கான தேவை குறைவினால் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.1,275 குறைந்து ரூ.39,625ஆக உள்ளது.
உள்நாட்டுத் தங்கம் விலையை நிர்ணயிக்கும் நியூயார்க் சந்தையில் தங்கம் விலை 0.8% சரிந்து அவுன்ஸ் ஒன்றிற்கு 1216.60 டாலர்களாக இருந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு கண்டதால் தங்கம் இறக்குமதியை எளிதாக்கியது. பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருவதாலும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டு வருகிறது.
ஒரு பவுன் விலை ரூ.200 வரை குறைந்து ரூ.24,200 ஆக உள்ளது.