எப்பொழுதுமே என்னோட டிக் சிகப்பு நிற ஸ்விப்ட். ரொம்பவே ஆசையாக அந்த காரை வாங்கி உபயோகித்து வருகிறேன். முதலில் அதோட அழகான லுக்தான் என்னைக் கவர்ந்தது. அதேபோல நகரம், கிராமம் இந்த இரண்டு இடங்களின் டிரைவிங்கிற்கும் ரொம்பவே இயல்பாகப் பொருந்தும். சில நேரங்களில் காரில் தனியாக டிரைவிங் செய்வதை விரும்புவேன். அப்போதும் ஸ்விப்ட்தான் நினைவுக்கு வரும்.
சமயங்களில் அலுவல் காரணமாகவோ, திடீர் பயணம் என்றோ தனிமையில் நீண்ட தூரம் புறப்படும்போது என்னோட ரெட் ஸ்விப்ட் காரின் கீ எங்கே என்று தேடுவேன். அந்த அளவுக்கு இதமான மனநிலையோடு பயணிக்க வைக்கும் கார் அது.