ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கான (ஆர்இஐடி) விதிமுறைகளை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டுள்ளது. இத்துடன் இன்ஃபிராஸ்டிரக்சர் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கான (இன்விட்) வழிகாட்டுதலும் வெளி யிடப்பட்டுள்ளது.
ஆர்இஐடி மற்றும் இன்விட் ஆகியவற்றுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் செபி ஒப்புதல் அளித்தது. இவை இரண்டிலும் முதலீடு செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப் படும். இவ்விரு அறக்கட்டளை களுக்கும் குறைந்தபட்ச முதலீட்டு அளவு ரூ. 250 கோடியாகும். இதில் பொதுமக்கள் முதலீடு 25 சதவீதம் வரை இருக்கலாம் என செபி வெளியிட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இரு அறக்கட்ட ளைகளுக்கான குறைந்த பட்ச சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மையுடன் இவ்விரு அறக்கட்டளைகளும் செயல்படும். அதேவேளையில் இவை நேர்மையாக செயல் படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்விரு அறக்கட்டளைகளும் நேரடியாக சிறப்பு முதலீட்டு திட்டங்களில் (எஸ்பிவி) முதலீடு செய்ய லாம். பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (பிபிபி) மேற்கொள்ளப்படும் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால் அது எஸ்பிவி மூலம் மேற்கொள் ளப்பட வேண்டும் என குறிப்பிடப்
பட்டுள்ளது. இவ்விரு அறக்கட் டளைகளிலும் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதமாக இருக்கலாம் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 200-க்கு அதிகமாக போகக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டு அளவு ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும். என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. திரட்டப்படும் மொத்த நிதியில் 80 சதவீத தொகை வருவாய் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளில் 2 பணிகள் ஆர்இஐடி-க்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அல்லது முதலீடு எஸ்பிவி மூலம் மேற்கொள்ளப் படுவதாக இருக்க வேண்டும். திட்டப் பணியின் மொத்த மதிப்பில் 60 சதவீதம் வரை ஒரு திட்டப் பணியில் முதலீடு செய்யலாம் என்றும் செபி வெளியிட்ட வழிகாட்டுதலில் குறிப்பிடப் பட்டுள்ளது.