வணிகம்

ஹனிவெல், டாடா பவர் ஒப்பந்தம்

பிடிஐ

அமெரிக்காவைச் சேர்ந்த ஹனி வெல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் டாடா பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக டாலின் எனப்படும் நேவிகேட்டர்களை இந்தியாவில் தயாரிக்கும்.

டாடா பவர் நிறுவனத்தின் அங்கமான ஸ்டிராடஜிக் இன்ஜினீ யரிங் பிரிவுடன் (எஸ்இடி) மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் டாலின் கருவிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஹனிவெல் அளிக்கும்.

ஜிபிஎஸ் சேட்டிலைட் வழிகாட்டுதல் கிடைக்காத இடங்களில் போர் வாகனங்களுக்கு வழிகாட்டும் டாலின் நேவிகேட்டர்களுக்கான காப்புரி மையை ஹனிவெல் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் காப்புரிமை பெற்ற தொழில் நுட்பம் டாடா பவர் நிறுவனத் துக்குக் கிடைப்பதோடு முன்னே றிய தொழில்நுட்ப வசதி நமது போர் வாகனங்களுக்கு இந்தியா விலேயே தயாராகும் வசதி ஏற்பட்டுள்ளது என்று டாடா பவர் நிறுவனத்தின் எஸ்இடி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் சவுத்ரி தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் மூலம் 2016-ல் இத்தகைய டாலின் கருவிகள் இந்தியாவிலேயே தயாராகும்.

SCROLL FOR NEXT