வணிகம்

45 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் வேலையின்மை விகிதம்: தொழிலாளர் அமைச்சக தரவு உறுதி செய்தது

பிடிஐ

தேர்தலுக்கு முன்பாக கசிந்த நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மே 31ம் தேதி அரசு தரவுகளின் படி வேலையின்மை விகிதம் 2017-18-ல் 6.1%  ஆக உள்ளது, இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வேலைவாய்ப்பின்மை விகிதமாகும்.

மொடி 2.0 அமைச்சரவை இன்று பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர் அமைச்சகம் இந்த வேலையின்மை விகிதத் தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதாவது நகர்ப்புறத்தில் வேலையில் அமர்த்தக்கூடிய தகுதியுடைய அனைத்து இளைஞர்களில் 7.8% வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். கிராமப்புறத்தில் இதே விகிதம் 5.3% ஆக உள்ளது.

இந்தியா முழுதும் வேலையில்லாமல் தவிக்கும் ஆண்களின் விகிதம் 6.2% ஆகவும் பெண்களின் விகிதம் 5.7% ஆகவும் உள்ளது என்கிறது தொழிலாளர் அமைச்சகத் தரவுகள்.

SCROLL FOR NEXT