லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் மிட்சுபிஷி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள எல் அண்ட் டி எம்ஹெச்பிஎஸ் பாய்லர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 1,885 கோடிக்கான ஆர்டர் கிடைத்துள்ளது.
என்டிபிசி நிறுவனத்துக்காக ஒவ்வொன்றும் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 நீராவி ஜெனரேட்டர்களை தயாரித்து அளிக்க வேண்டும். வடிவமைப்பு, பொருள் கொள்முதல், உற்பத்தி, கட்டுமானம், நிர்வகிப்பது, சோதிப்பது மற்றும் அதை இயக்கச் செய்து ஒப்படைப்பது இந்த பணியில் அடங்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் இந்த ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட உள்ளது. முதலாவது ஜெனரேட்டரை 46 மாதங்களிலும் அடுத்ததை 52 மாதங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
எல் அண்ட் டி எம்ஹெச்பிஎஸ் நிறுவனத்தில் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், ஜப்பானின் மிட்சுபிஷி ஹிடாச்சி பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகளும் உள்ளன.