காகிதம் இல்லாத சேவை என்ற பசுமை சூழல் அடிப்படையில் ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு சங்கேத குறியீட்டு எண்ணை இனி எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சங்கேத குறியீட்டு எண்ணை அனுப்ப பயன்படுத்தப் படும் காகிதம், அதற்குரிய கவரும் மீதமாகும். இதன் மூலம் வாடிக்கை யாளர்களின் நேரமும் மிச்சமாகும். ஹெச்டிஎப்சி வங்கியில் 1.75 கோடி டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 16.5 லட்சம் அட்டைகள் விநியோகிக்கப்படு கின்றன. இதற்கான காகிதம் இனி மிச்சமாகும்.
பி.டி.ஐ. எஸ்எம்எஸ் மூலம் சங்கேத குறியீட்டு எண்ணை அனுப்பும் வசதி ஜம்மு காஷ்மீர் தவிர்த்து பிற மாநிலங்களில் செயல்படுத்தப் படும். அதிக எண்ணிக்கை யிலான எஸ்எம்எஸ்கள் அனுப்ப ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளதால் அங்கு மட்டும் இப்போது நடைமுறையில் உள்ளபடி தபாலில் சங்கேத எண் அனுப்பப்படும்.