ரயில்வே துறை சார்ந்த நிறுவனங் களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு மூலம் அரசு ரூ. 1,500 கோடியை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ் விரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு இந்த ஆண்டு செப்டம்பரில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு தொடக்கத் திலேயே இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (ஐஆர்எஃப்சி) பங்குகளை வெளி யிட நிதி அமைச்சகம் திட்ட மிட்டது. பங்குச் சந்தையில் பட்டிய லிட்ட பிறகு அதிக வட்டிக்கு கடன் திரட்ட நேரிடும் என ரயில்வே அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட் டது. இருப்பினும் இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு மத்திய அமைச் சகத்திடம் விடப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு செப்டம்பர் மாதம் இவ்விரு நிறுவனங்களின் பொதுப் பங்குகளும் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரயில்வேயின் விரி வாக்கத் திட்டத்துக்குத் தேவை யான நிதியை வழங்குவதற்காக பொதுப்பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட ஐஆர்எஃப்சி திட்டமிட் டுள்ளது. அதேபோல நாட்டில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த அடிப்படை கட்டமைப்பு வசதி களை உருவாக்க தேவையான நிதியை பங்கு வெளியீடு மூலம் திரட்ட ஐஆர்சிடிசி உத்தேசித் துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.